"பால் குடத்துடன் சென்ற இந்துக்கள்".. "போராட்டத்தை நிறுத்தி வழி விட்ட இஸ்லாமியர்கள்" சமூக வளைத்தில் வைரலாகும் வீடியோ!!

"பால் குடத்துடன் சென்ற இந்துக்கள்".. "போராட்டத்தை நிறுத்தி வழி விட்ட இஸ்லாமியர்கள்" சமூக வளைத்தில் வைரலாகும் வீடியோ!!

கடந்த 18ஆம் தேதி கல்வி நிறுவனங்களில்  ஹிஜாப் அணிய தடை என கர்நாடக அரசு உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம்  நடைபெற்றது. இதே போல் தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில் பால்குடம், காவடி எந்திகொண்டு பெரும் வாரியான பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அதனை புரிந்து கொண்டு இஸ்லாமிய மக்கள் கோஷத்தை அப்படி நிறுத்தி கொண்டு ஊர்வலம் எளிதாக செல்லுவதற்கு மனித சங்கிலி அமைத்து பக்தர்களுக்கு எந்த இடையூறு இன்றி இஸ்லாமிர்கள் கரம் கோர்த்து கவசமாக நின்றனர். பக்தர்கள் கடந்த சென்ற பிறகு போராட்டத்தை நடத்தினர். இந்த விடியோனது சமூக வளையத்தில் வைரலாகி வருகிறது.