எப்படி இருந்த நான்,.. இப்படி ஆகிட்டேனே...! லைக்ஸ்-க்கு ஆசைப்பட்டு அரிவாளுடன் ரீல்ஸ் பதிவிட்ட நபர் கைது...!

எப்படி இருந்த நான்,.. இப்படி ஆகிட்டேனே...!  லைக்ஸ்-க்கு ஆசைப்பட்டு அரிவாளுடன் ரீல்ஸ் பதிவிட்ட நபர் கைது...!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே கையில் அரிவாளுடன் ரீல்ஸ் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள நாச்சான்குளம் மேலூரை சேர்ந்தவர் குமரேசன். கொத்தனார் வேலை செய்து வரும் இவர் கையில் அரிவாளை பிடித்தப்படி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள நிலையில் போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து குமரேசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே கையில் அரிவாளுடன் சமூகவலைதளத்தில் பதிவிட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். 

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள நாச்சான்குளம் மேலூரை சேர்ந்தவர் வேலாயுதம் என்பவருடைய மகன் குமரேசன் (வயது 22). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். 

இவர் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசாரின் கவனத்திற்கு வந்த நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர்  ஐசக் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து குமரேசனை  கைது செய்தார். 

இதையும் படிக்க     |     'ஒடிசா இரயில் விபத்து' கமலஹாசன் இரங்கல்!

தற்போது இளைஞர்கள் சமூக  வலைத்தளங்களில் பிரபலமாவதற்கும் லைக்குகள் பெறுவதற்கும் வித்தியாசமாக செயல்களை செய்து பதிவிடுகிறோம் என்ற பெயரில், அர்த்தமற்ற செயல்களை செய்து சிலர் இதுபோன்று  பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கின்றனர். நம்மை தொடர்ந்து வரும் தலைமுறைக்கு நாம் சிறந்த எடுத்துக்காட்டாக  இருக்க முடியவில்லை என்றாலும் தவறான உதாரணமாக அமைந்துவிடக்கூடாது. எனவே இளைஞர்கள் விழிப்புடன் சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. 

இதையும் படிக்க     |     "சென்னையில் நான்கு மருத்துவமனைகள் தயார்" ககன் தீப் சிங் பேடி அறிவிப்பு!