நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான்.. அண்ணாமலை குறித்து அமைச்சர் நாசர் விமர்சனம்!

நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான்.. அண்ணாமலை குறித்து அமைச்சர் நாசர் விமர்சனம்!

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கூறுவதைப் போல் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என அண்ணாமலை சொல்லி வருவதாவ பால்வளத்துறை அமைச்சர் நாசர் விமர்சனம் செய்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், ஆவின் பணியிடங்களை பொறுத்தவரை கடந்த காலங்களில் முறைகேடான முறையில் வேலைவாய்ப்பு துறையின் விதிகளை மீறி ஆட்களை நிரப்பும் பணியை மேற்கொண்டதாகவும் தற்போது முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தி வைத்துள்ளார்கள் என்றும் அந்த பணிகள் முறைப்படுத்தி துவங்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ஆவின் பாலகங்களில் ஏதேனும் தவறுகள் நடப்பதாக தகவல் வந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.