" பொன்முடி நினைத்திருந்தால் மேல் பாதியில் நடைபெற்ற ஜாதி கலவரத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம்" - ஏஜி சம்பத்.

" பொன்முடி நினைத்திருந்தால் மேல் பாதியில் நடைபெற்ற ஜாதி கலவரத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம்"  - ஏஜி சம்பத்.

பொன்முடி நினைத்திருந்தால் விழுப்புரம் மாவட்டம் மேல் பாதிதியில் நடைபெற்ற ஜாதி கலவரத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என திண்டிவனத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் கூறியுள்ளார். 

திண்டிவனத்தில்  பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்  தலைவர் ஏஜி சம்பத் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் அவர் பேசும்போது, தமிழர்கள் போற்றுகின்ற செங்கோலை பாராளுமன்றத்தில் கொண்டு சென்று வைத்ததன் மூலம் தமிழர்களாகிய நாம் அனைவருக்கும் பெருமை துணைஎரு கூறியவர், 
 இதனைப் பற்றி பேசி தமிழுக்கும், தமிழர்களுக்கும் துரோகிகளாகவும், விரோதிகளாகவும் யாரும் மாறிவிடக்கூடாது என்றும்  வேண்டுகோள் விடுத்தார். 

மேலும்மேல்பாதி கோவிலுக்கு சீல் வாய்த்த விவகாரம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்து பேசும்போது:  

" விழுப்புரம் மாவட்டம் மேல் பாதியில் நடைபெற்ற ஜாதி மோதலை அமைச்சர் பொன்முடி நினைத்திருந்தால தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஏனென்றால் பொன்முடிக்கு அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் விலை நிலங்கள் இருக்கின்றது. அந்த கிராமம் ஏறக்குறைய  அவருக்கு சொந்த கிராமம் மாதிரி. அதனால் தான் சொல்கிறேன், அவர் நினைத்திருந்தால் அந்த ஜாதி மோதலை தடுத்து நிறுத்தி இரு சமுதாய மக்களையும் சமாதானப்படுத்தி கோயில் பூட்டப்பட்டதை தடுத்திருக்கலாம் . மாறாக நடைபெற்ற சம்பவத்திற்கு பல்வேறு காரணங்களை சொல்வதன் மூலம் சம்பவத்தை மடை  மாற்றிவிட முயற்சி செய்கின்றார்கள்",  என்று காட்டம் தெரிவித்தார்.

இதையும் படிக்க     | "தேசிய விளையாட்டு; மீண்டும் இதுபோன்று தவறு நடக்காது" உதயநிதி உறுதி!