" ஸ்டாலின் தான் தலைசிறந்த முதல்வர் " - கே.பி. முனுசாமி.

" யானை தாக்கினால் - 5 இலட்சம்.... பணியில் உயிரிழந்தால் - 3 இலட்சம்,... விஷச்சாராயம் குடித்தால் 10 இலட்சம்....?"

" ஸ்டாலின் தான் தலைசிறந்த முதல்வர் " - கே.பி. முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரியில் இபிஎஸ் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக  அதிமுகவின் துணை பொதுசெயலாளரான  கே.பி. முனுசாமி பங்கேற்று நலதிட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி, செயலிழந்த ஆட்சியாக இருந்து வருகிறது என்றும், சமூக விரோத சக்திகள் சட்டத்தை கையில் வைத்திருப்பதால்  தான் சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளது என்றும் விமர்சித்தார். 

மேலும், ஏழை,எளியோர் உடல் வலிக்கு மது அருந்த சென்றால் கூடுதல் விற்பனைக்கு விற்கிறார்கள் என்றும், அதற்கு முழு பொறுப்பு தமிழக முதல்வர் தான் எனவும் விமர்சித்தார். 

அதோடு,  "யானை தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு 5 லட்சம் நிவாரணம், கட்டிடத்தொழிலாளி பணியின் போது தவறி விழுந்தால் 3 லட்சம் நிவாரணம் ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி ஊக்குவிக்கிறார்கள் என்றால் ஸ்டாலின் தான் தலைசிறந்த முதல்வர் என்பதை காட்டுகிறது" என்றும், வேறு விமர்சிக்க முடியவில்லை,   எனவும் கூறினார். 

இதையும் படிக்க    }  விஷச்சாராயத்தால் மீண்டும் ஒரு பலி..! திண்டிவனத்தில் பொதுமக்கள் சாலை மறியல்..!

மேலும், கர்நாடகா சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு: மாநிலத்தில் நடக்கும் தேர்தலுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் வித்தியாசம் இருப்பதால் இவை நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என்றார். 

இதையும் படிக்க    } "மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம்?'' சீமான் கேள்வி!