ஹிந்தி படித்தால் பானிபூரி தான் விற்கனும்..! ஹிந்தி படித்தால் தமிழ்நாட்டில் என்ன வேலை கிடைக்கும்?

அமைச்சரின் கருத்தால் பாஜகவினரிடையே சலசலப்பு..!

ஹிந்தி படித்தால் பானிபூரி தான் விற்கனும்..! ஹிந்தி படித்தால் தமிழ்நாட்டில் என்ன வேலை கிடைக்கும்?

ஹிந்தி படித்தால் பானிபூரி தான் விற்கனும் இஷ்டம் இருந்தால் படித்துக் கொள்ளுங்கள் என உயர்க்கல்வித்துறை 
அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் சார்பில் கல்லூரி 
மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, உக்ரைன் நாட்டில் இன்ஜினியரிங் சேர்ந்து படிப்பு முடிக்காத மாணவர்கள் தமிழகத்தில் படிப்பை துவங்கலாம். அதாவது தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களில் இவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உலகளாவிய தொடர்புக்கு தமிழ், கூடுதலாக ஆங்கில மொழி அறிவு இருந்தால் போதுமானது. இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழகத்தில் பானிபூரிதான் விற்கிறார்கள்.

தமிழகத்தில் இந்தி படிக்க வேண்டாம் என எப்போதும் நாங்கள் கூறவில்லை. மூன்றாவது மொழியாக எந்த மொழி 
வேண்டுமானாம் படிக்கலாம் தவறில்லை. ஆனால் மூன்றாவது மொழியாக இந்தி மொழியை திணிப்பதைதான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழகத்தில் இந்தி படித்தால் என்ன வேலை கிடைக்கும்?'' என கேள்வி எழுப்பினார். இவரது இந்த பதில் தமிழ்நாட்டில் பாஜகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மும்மொழி கல்வியில் 
பாஜக-திமுகவுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் சூழலில், இப்படி பளார் என்று அவர் கூறியுள்ள கருத்து 
சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.