காவலர் உடற்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம்... தருமபுரியில் இளைஞர் கைது...

தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற  இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

காவலர் உடற்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம்...  தருமபுரியில் இளைஞர் கைது...
தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த காவல் தேர்வர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற காவலர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில்  சின்ன முருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் ஆள்மாறாட்டம் செய்ய முயன்றது தெரியவந்தது.
 
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரகாஷ் என்பவரின்  அழைப்புக் கடிதத்தில்  சசிகுமார்  தனது போட்டோவை மாற்றி வைத்து காவலர் உடற்தகுதி தேர்வுக்கு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சசிகுமாரை காவல்துறையினர் கைது  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.