தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்..!

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 108.14°F வெப்பம் பதிவு. 

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த ஜூன் மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 108.14°F வெப்பம் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று 18 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதிய வேலைகளில் வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் மாலை வேலைகளில் கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

நேற்றும் சென்னைக்கு ஒரு சில பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்ந்த சூழலை உண்டாக்கிய நிலையில் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மதியம் கடும் வெயில் வாட்டிய நிலையில் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ததால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 108.14°F வெப்பம் பதிவாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த ஜூன் மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 107.42°F, வெப்பமும் சனிக்கிழமை 107.78°F, வெப்பம் பதிவாகி இருந்த நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் 108.14°F வெப்பம் பதிவாகி புதிய  உச்சத்தை தொட்டு உள்ளது.

இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 41.8 C அதாவது 107.24°F வெப்பம் பதிவாகியது இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கத்தில் 107.60°F, கடலூர் 100.40°F, தர்மபுரி 101. 30°F, ஈரோடு 101.48°F, கரூர் பரமத்தி 104.00°F, மதுரை நகரம் 102.20°F, மதுரை விமான நிலையம் 102.56°F, பாளையங்கோட்டை 101.30°F, புதுச்சேரி 102.57°F,  சேலம் 102.02°F, திருப்பத்தூர் 101.48°, திருச்சி 102.74°F, திருத்தணி 106.70°F, வேலூர் 107.60°F வெப்பம் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க     |  " தேசிய கல்விக் கொள்கை, மாநில கல்வி கொள்கை என எங்களுக்கு எதுவும் இல்லை " - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்.