என்ன மத்தியானத்துக்கு வெறும் தக்காளி சாப்பாடா?  சாப்பிட்டுக் கொண்டே போராட்டம் நடத்தும் அதிமுக தொண்டர்கள்...

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் போராட்டம் நடத்தி அவரது ஆதரவாளர்கள் உணவு சாப்பிட்டுகொண்டே போராடி வருவது சமூகவலைதளங்களில் இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

என்ன மத்தியானத்துக்கு வெறும் தக்காளி சாப்பாடா?  சாப்பிட்டுக் கொண்டே போராட்டம் நடத்தும் அதிமுக தொண்டர்கள்...
எஸ் பி வேலுமணி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் குவித்துள்ளதாக, சில ஆண்டுகளுக்கு முன்னரே அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. அதேபோல திமுக சார்பிலும் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். புகார் அறப்போர் இயக்கம் புகார் அளித்து 2 ஆண்டுகளைக் கடந்திருந்த நிலையிலும், எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படாமல் இருந்தது. 
 
இந்தச் சூழலில் தான் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, சென்னை, திண்டுக்கல் என 53க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படும் வரும் நிலையில், சில இடங்களில் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ட்விட்டர் தளத்திலும் இந்த ரெய்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
எஸ் பி வேலுமணிக்கு எதிராக ஊழல்மணி வேலுமணி என்ற ஹேஷ்டெக்கும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக போராடுபவர்களுக்கு தற்போது உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கிண்டல் செய்யும் விதமாகவும் சாப்பிட்டுக் கொண்டே போராட்டம் நடத்தும் ஒரே கட்சி என்று இணையவாசிகள் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.அதேபோல தேர்தல் பிரசாரத்தின் சமயத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.