மாநகராட்சி மேயர், நகராட்சி/பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல்... மார்ச் 4 ஆம் தேதி - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

மாநகராட்சி மேயர், நகராட்சி/பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் வரும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும்  என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி மேயர், நகராட்சி/பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல்... மார்ச் 4 ஆம் தேதி - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி  நடத்தக்கட்  22 ஆம் தேதி அதன்  முடிவுகள்  அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தல்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள்  வரும் 2 ஆம் தேதி தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஆணையாளர் செயல் அலுவலர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள உள்ளனர. இதற்கான ஏற்பாடுகுள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் மாநகர மேயர் துணை மேயர் மற்றும் நகர தலைவர் பேரூராட்சி  தலைவர்  மற்றும் துணை தலைவர் பதவிகளை பிடிக்க  திமுக வினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்த நிலையில் மாநகராட்சி மேயர், நகராட்சி/பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4 ஆம் தேதி  காலை  9. 30 மணிக்கு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், மாநகராட்சி துணை மேயர், நகராட்சி/பேரூராட்சி துணை தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு நடத்தி  முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே  மறைமுக தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற அனைத்து உறுப்பினர்களும் முழு  ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும் என  மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.