சென்னையில் தொற்று பாதிப்பு 26.6 %-ல் இருந்து 5.9% ஆக குறைவு...

சென்னையில்  அதிகரித்திருந்த கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. 

சென்னையில் தொற்று பாதிப்பு 26.6 %-ல் இருந்து 5.9% ஆக குறைவு...

சென்னையில் கொரோனா தொற்று பரவல், மே மாதம் 10 தேதி 26 புள்ளி 6 சதவீதமாக ஆக இருந்துவந்தது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு, விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அத்துடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி தற்போது, சென்னையில் 5 புள்ளி 9 சதவீதமாக தொற்று பரவல் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும், அண்ணாநகர், கோடம்பாக்கம் போன்ற சில மண்டலங்களில், தொற்று பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

அண்ணாநகரில் 2ஆயிரத்து,258 நபர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று, கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து  320 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றுப் பரவலைக் குறைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மாநகராட்சியில் நாள்தோறும், சராசரியாக 30 ஆயிரம் நபர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 30 ஆயிரத்து,118 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில், ஆயிரத்து 789 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.