ஜெயக்குமார் பெயர் இருக்கும் கல்வெட்டுகள் இரவோடு இரவாக உடைத்து அகற்றம்!! ராயபுரம் திமுகவினர் அதிரடி...

ஜெயக்குமார் பெயர் இருக்கும் கல்வெட்டுகள் இரவோடு இரவாக உடைத்து அகற்றம்!! ராயபுரம் திமுகவினர் அதிரடி...

சென்னை ராயபுரத்தில் உள்ள அம்மா மினி கிளினிக் கல்வெட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெயர் இருக்கும் கல்வெட்டுகளை இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சியில் மினி கிளினிக்குகளை தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.முதல் முதலில்  சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மினி கிளினிக் திட்டத்தை முன்னாள் முதல்வர் பழனிசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் பெயர், இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பெயர் இருந்த கல்வெட்டை, அப்பகுதி திமுக வினர் இரவோடு இரவக வெள்ளை நிற சுண்ணம்பை அடித்து மறைத்துள்ளனர்.  

இதேபோல், ராயபுரம் மக்களின் குடிநீர் தேவைக்கக தொகுதி மேம்பட்டு நிதியில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட கல்வெட்டையும் திமுகவினர் இரவோடு இரவாக இடித்து தள்ளியுள்ளனர்.  
ராயபுரம் எஸ்.என்.செட்டி தெரு, சேக் மேஸ்த்ரி தெரு, ஜி.ம். பேட்டை தெரு,அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் திட்டத்தை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் பெயர் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமரின் பெயர் இருந்த கல்வெட்டுகள், அங்கே போடப்பட்டிருந்த குழாய்களை திமுக வினர் அடித்து உடைத்துவிட்டதாக அப்பகுதியினர் குற்றம்சட்டியுள்ளனர்.