மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்குக - வைகோ!!!!

மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்குக - வைகோ!!!!

தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் - மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு எண் 9 மற்றும் 14 ஆகியவற்றை உள்ளடக்கிய அண்ணா நகர் புல எண் 160/2 கிராம நத்தத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, என்னுடைய வழிகாட்டுதலின் படி, மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவரும், மதிமுக துணை பொதுச் செயலாளருமான மல்லை சத்யா அவர்கள் கடந்த 2021 டிசம்பர் 10 ஆம் தேதி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அருமைச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, கோரிக்கை வைத்தார். 

அதன் மீதான விரைவு நடவடிக்கையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அலகு நிமு 1 (1) பிரிவு அரசுத் துணைச் செயலாளர் தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி 2021 டிசம்பர் 27 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 2022 பிப்ரவரி 3ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் அந்தக் கடித நகலை மாண்புமிகு தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் அவர்களுடன்  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து 17.03.2022 அன்று நேரில் வழங்கியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.  எனவே 04.12.2022 அன்று மாமல்லபுரம் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து பட்டா வேண்டி மீண்டும் மனு வழங்கியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, தக்க  நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தை மனுதாரருக்கும் தெரிவிக்குமாறு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரின் சிறப்பு உதவியாளர் மூலமாக 30.12.2022 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல்காந்தி ஆதரவளிப்பாரா? மாநிலங்களவையில் ஆம் ஆத்மி பெரும்பான்மை வகிக்குமா?

அந்தக் கடித நகலையும் மாண்புமிகு ஊரக தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் அவர்கள் முன்னிலையில் 09.05.2023 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கடாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் 75 உருண்டோடிக் கொண்டிருக்கும் நிலையிலும், கிராம நத்தத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் மக்கள்  பட்டா வேண்டி போராட வேண்டிய நிலையில்தான் நாடு இருக்கிறது.

மக்களுக்காக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தளபதி °டாலின் அவர்களின் தலைமையிலான அரசு, மாமல்லபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த வருவாய் தீர்வாயத்தில் நிவர்த்தி செய்து பட்டா வழங்க வேண்டுகின்றேன்.இதில் மத்திய தொல்லியல் துறை ஆட்சேபனை இருந்தால், முத்தரப்பு கள ஆய்வு செய்து, மக்களின் கருத்தை அறிந்து, தேவைப்படின் நிபந்தனைகளுடன் பட்டா வழங்கி உதவிட தமிழ் நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.