போக்சோ வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக புதிய வழிமுறைகளை வழங்கியுள்ளார் டிஜிபி...!

போக்சோ வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக புதிய வழிமுறைகளை வழங்கியுள்ளார் டிஜிபி...!

போக்சோ வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய வழிமுறைகளை வழங்கியுள்ளார்.

சுற்றறிக்கை அனுப்பிய சைலேந்திரபாபு:

சென்னை உயர்நீதிமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், காவல்துறை விசாரணை அதிகாரிகளுக்கு சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, போக்சோ சட்ட வழக்குகளில், மரணமாக இருந்தாலும், பிற குற்றங்களாக இருந்தாலும் முதல் தகவல் அறிக்கை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பொய்க்கு நோபல் பரிசு.. ! அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் படம் நீக்கம்..! வெற்றி களிப்பில் எடப்பாடி பழனிசாமி..!

காணொளிப்பதிவு:

அதுமட்டுமின்றி, முக்கியமான வழக்குகளில் நீதிமன்றத்தில் இருந்து காணொளிப்பதிவு எடுப்பது தொடர்பான ஆணை பெறப்பட்டால் மட்டுமே காணொளிப்பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவசியத் தேவையின்போது மட்டுமே எடுக்கப்பட்ட காணொளிப் பதிவுகளை மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும் எனவும், நிவாரணம் பெறுவது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை அதிகாரிகள் முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.