பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி அல்ல... பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி பேட்டி...

பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி அல்ல என்று பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி கூறியுள்ளார்.

பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி அல்ல... பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி பேட்டி...
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை  இழிவாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து  தமிழக பாஜக சார்பில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த்  தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி  முன்னிலையில்  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி,
 
தேவையில்லாமல் மதக் கலவரத்தை உருவாக்குவதற்காக ஜார்ஜ் பொன்னையா  இப்படி பேசியுள்ளார் என்றும்  திமுகவை  பற்றியும் முதல்வரையும் அவர் இழிவாக பேசியுள்ளார் ஆனால் இதற்கு ஏன் திமுக இன்னும் வாயை மூடி உள்ளது என்பது தெரியவில்லை,  இவரை ஏன் இன்னும் குண்டர் சட்டத்தில் போடவில்லை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என்பது தான்  எங்கள் கோரிக்கை.
 
ஒரு நாட்டின் மொத்த மதத்தையும் எப்படி ஒருவர் கொச்சைப்படுத்தி பேசலாம் என்று கூறிய அவர், 
போலி கிறிஸ்துவுக்காக நாங்கள் போராடி வருகிறோம்,  கிருஸ்தவர்களையும்,  பைபிள்களையும் இழிவுபடுத்துமாறு அவர் பேசியுள்ளார், சமூக வலைதளங்கள் என்ன செய்து வருகிறது இதை ஏன் யாரும்  பெரிதுபடுத்தவில்லை  எனவும் கேள்வி எழுப்பினார்.
 
மேலும்  மதத்தை தேசியத்தையும் ஒருமைப்பாட்டையும் தவறாக பேசினால்  பாஜக சும்மா இருக்காது. மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜக இல்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் எங்களை சங்கி என்கிறார்கள். அதற்காக நாங்கள் கவலைப்படப் போவதில்லை இந்த சங்கிகள் தான் அனைத்து கிறிஸ்துவர்களுக்காக  போராடுகிறது. அவரை குண்டர் சட்டத்தில் போடும் வரையிலும்,  நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே எங்கள் போராட்டங்கள் இருக்கும் என்றும் கூறினார்.