மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி!

 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாடுவரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ. சண்முக சுந்தரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரையில் காஞ்சிபுரம் நீங்கலாக மீதமிருந்த 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப் பட்டிருந்த நிலையில், இன்று இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வரலாற்றில்  மற்றுமொரு மைல்கல்: அனைத்து  மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி!

மேலும் படிக்க | “செங்கோல் என்ற ‘புரூடா’ வித்தைகள் பலிக்காது -கி.வீரமணி அறிக்கை!!!

இதன்மூலம் தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்.இதன் மூலம், தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றுள்ளன. மேலும் இதன் மூலம், வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்பது பொய்! போலி விளம்பரத்தை கண்டு  மக்கள் ஏமாறாதீர் -தமிழக அரசு | Advertisement of direct appointment in  co-operative bank is false ...

ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலை உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பணமற்ற பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இது படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு, மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.