கள்ளக்குறிச்சியில் கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமா..? -உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை ...

கள்ளக்குறிச்சியில் கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமா..? -உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை ...

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு, கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுக்கவும், நிலத்தை மதிப்பீடு செய்யவும் கூடாது என இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.