கர்பிணிகளுக்கான ஊட்டசத்து மாவு டென்டரில் முறைகேடா? - பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம்

கர்பிணிகளுக்கு வழங்கப்படும்  ஊட்டசத்து மாவு டென்டரில் முறைகேடு நடந்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில் அதற்கு துறை சார்ந்த அமைச்சரும் அதிகாரியும் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

கர்பிணிகளுக்கான ஊட்டசத்து மாவு டென்டரில் முறைகேடா? - பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம்

கர்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாவை ஆவினில் வாங்காமல் அதிக விலைக்கு தனியாரில் வாங்கியதாக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டி இருநு்தார்.

இந்த நிலையில்  சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு மீது  அண்ணதமலை பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருகப்பதாக நாசர் கூறினார்.

தொடர்ந்து பேசிய பால்வளத்துறை செயலாளர் ஜவஹர், கர்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாவை ஆவினில் தயாரிக்க முடியுமா என்ற ஆய்வு இரண்டு மாதங்களில் முடிவடையும் என்றார். அந்த ஆய்வு பணிகள் முடிவடைந்த பின்னர் ஆவின் நிறுவனத்திற்கு லாபம் ஏற்படும் என தெரிந்தால் நிச்சயம் அந்த பொருளை தயாரிப்போம் என தெரிவித்தார்.