தமிழகத்தில் மூன்றாம் அலைக்கு வாய்ப்பு இருக்கா? அமைச்சர் மா.சு விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ஆம் அலைக்கு வாய்ப்பில்லை  என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் மூன்றாம் அலைக்கு வாய்ப்பு இருக்கா? அமைச்சர் மா.சு விளக்கம்

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்ட துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். செல்லாண்டிபாளையம் கிராமத்தில் 5 முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதௌ அமைச்சர் பார்வையிட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை மற்றும் மருந்துகள் அடங்கிய பெட்டிகளை வழங்கி கேட்டறிந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழகத்தில் நடைபெற்ற 5ம் கட்ட சிறப்பு முகாமில் 6மணி நிலவரப்படி 1998000 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 1 மணி நேரம் இருக்கிறது. இது மகத்தான வெற்றி. இதுவரை 5 கோடி 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 64% பேர். இரண்டு தவணை செலுத்திக் கொண்டவர்கள் 22% பேர். கரூரில் மிக அதிக அளவாக 853600 பேர் செலுத்தியுள்ளனர். இது 73% ஆகும். முதல் இடத்தில் உள்ள சென்னைக்கு அடுத்து கரூர் 2ம் இடம் பிடித்துள்ளது. சிறிய மாவட்டமாக இருந்தாலும் அதிகளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் 120960 டோஸ்கள் கையிருப்பு உள்ளது. பரிசளிப்பு போன்ற திட்டங்களால் அதிகளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருற்றுவம் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிரார்கள். 1888703 பேர் இது வரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கற்பினி  பெண்களுக்கு அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் தங்கி இருந்த 150 நாடோடிகளுக்கு பேருக்கு தடுப்பூசி போட்டோம். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகள் கடத்தல் கடந்த 5 மாதத்தில் முதல் முறையாக தஞ்சையில் நடந்தள்ளது. தமிழகத்தில் பிரசவ வார்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத மருத்துவமனைகளில் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களாகிய நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக்கம் வேண்டாம். 3வது அலை வர வாய்ப்பு இல்லை. வந்தால் தெரியப்படுத்துகிறோம்.  கொரனோவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி கொடுத்தது நம் முதல்வர் தான். பிறகு எல்லா மாநிலங்களிலிம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாள் ளொன்றுக்கு டெஸ்ட் எடுக்கப்படுவதில் 1 சதவீதம் பேருக்கு கொரனோ உறுதி செய்யப்படுகிறது. இன்று 1325 நபர்களுக்கு கொரனோ டெஸ்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 1 சதவீதற்கு கீழ் உள்ளது. முதல் தடுப்பூசி 70% போட்டால் தற்காத்து கொள்ளலாம். என்ற நோக்கில் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பதால் அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றார்.