தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது கஷ்டம்...அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, மத்திய அரசு கூடுதல் வரி விதிக்கும் என எதிர்பார்க்கவில்லை என நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது கஷ்டம்...அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து ஆளுநர் உரைக்கு பின் இருவாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 2014ல் மத்திய அரசு 10.39 ரூபாய் இருந்த பெட்ரோல், டீசல் வரியை ரூ.32.90 ஆக உயர்த்தியது.
ஏற்கனவே, கலால் வரியாக 4.80 ரூபாய் வரியாக கிடைத்தது. ஆனால் தற்போது ரூ.31.50-ஐ மாநிலங்களுக்கு கொடுக்காமல் முழுமையாக எடுத்துகொள்கிறார்கள்.

தமிழகத்திற்கு வர வேண்டிய 4% வரி 336 கோடி குறைந்துள்ளது, தமிழக அரசுக்கு இழப்பை அதிகரிக்க புதிய திட்டமும் வருகிறது. 1 ரூபாய் வரியில் 35 பைசா தான் திரும்ப வருகிறது. மேலும் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வரியை விட தமிழகத்தில் குறைவுதான். செஸ் வரி 12 சதவீதம் தற்போது 3 மடங்கு அதிகரித்துள்ளார்கள்.

இதனால் எங்களால் தற்போது உடனடியாக வாட் வரியை குறைக்க முடியவில்லை. நாங்கள் தான் அனைத்தும் என மத்திய மத்திய அரசு நினைக்கிறது.நாங்கள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும், போது மத்திய அரசு கூடுதல் வரி விதிக்கும் என எதிர்பார்க்கவில்லை. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை உடனே திருத்த வேண்டும் என்ற அவசியமில்லை. 5 ஆண்டுகள் உள்ளது எனத் தெரிவித்தார்.

நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. அதை எந்த அளவிற்கு குறைக்க முடியுமோ அதை செய்வோம், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.அனைவருக்கும் சுகாதாரமான வாழ்வு கிடைக்க வேண்டும், மாற்றுத்திறனாளி, முதியோர் உதவித்தொகை, வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு இவை அனைத்தும் செயல்படுத்தப்படும்.

60% வரியானதை தொழிற்சாலை, பெறும் முதலாளி ஆகியோரிடமிருந்து நேர்முக வரியில் இருந்து எடுக்க வேண்டியது. ஆனால் தற்போது 10-12% வரி தான் எடுக்கப்படுகிறது. மீதமுள்ளதை பொதுமக்களிடம் எடுத்து வருகிறது மத்திய அரசு. அதை திருத்த வேண்டும், தமிழக அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பணக்காரர்களிடம் வசூலிக்கும் நேர்முக வரியை, பொதுமக்களிடம் திணிக்கிறது மத்திய அரசு என நிதித்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.