ஜெயலலிதாவை பற்றி கொச்சையாக பேசியவர் கே.பி.முனுசாமி :  கொளத்தூர் கிருஷ்ணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு !!

ஜெயலலிதாவை பற்றி கொச்சையாக பேசியவர் கே.பி.முனுசாமி :  கொளத்தூர் கிருஷ்ணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு !!

கொளத்தூர் கிருஷ்ணசாமி

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சென்னை கொளத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : 

தோல்விக்கு காரணம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஓ. பன்னீர்செல்வத்தை  இரண்டு முறை முதலமைச்சராக்கினார். அவரை விமர்சனம் செய்யும் வகையில் எடப்பாடியும், அவரது துதி பாடுபவர்கள் பேசி வருகிறார்கள். கட்சி தோல்விக்கு காரணம் ஓ.பி.எஸ் என கூறி வருகிறார்கள். 

அகங்காரம் பிடித்தவர் ஈபிஎஸ்

கட்சியின் தோல்விக்கான காரணங்களை நான் தெரிவிக்கிறேன். அம்மாவை விட சிறப்பாக ஆட்சி செய்வதாக எடப்பாடியை பேசினார்கள். தான் என்ற அகங்காரம் எடப்பாடியிடம் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி சி.வி.சண்முகத்திற்கு ராஜ்ய சபா எம்.பி., பதவியை கொடுக்கிறார். ஓ.பி.எஸ் தொண்டரான தர்மருக்கு வாய்ப்பு கொடுத்தார். இவ்வாறு தொண்டர்கள் நலனுக்காகவும், கட்சி நலனுக்காகவும் தான் ஓபிஎஸ் அமைதியாக இருந்தார்.

மேலும் படிக்க : 10 நாளுக்கு வாகனச் செலவு இத்தனை கோடியா? : வாயைப் பிளக்க வைத்த புதுச்சேரி அமைச்சர்கள் !!

ஓபிஎஸ்ஸை அழிக்க திட்டம்

தர்மயுத்தம் நடந்து முடிந்த பிறகு திமுகவை ஜெயிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கவில்லை. ஓ.பி.எஸ். எப்படி அழிக்க வேண்டும் என்றுதான் பார்த்தார்கள். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் தென் மாவட்டங்களில் தோல்வியை சந்தித்தோம். இதற்கு முழு காரணம் இபிஎஸ் என குறிப்பிட்ட கிருஷ்ணசாமி, 

அட்ரஸ் இல்லாமல் போயிருப்பார்

ஆட்சியில் இருந்த போதே எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு கொள்ளை வழக்கை கண்டுபிடித்து இருக்க வேண்டும். அம்மா கோவில் என சொல்பவர்கள் ஆட்சியில் இருந்த போது ஏன் கொடநாடு கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. அதை பற்றி மட்டும் எடப்பாடி எப்போதும் பேச மாட்டார். ஓ.பி.எஸ் கட்சியில் இருப்பது கட்சிக்கு பாரம் என கே.பி.முனுசாமி பேசுகிறார். ஓ.பி.எஸ். இல்லையென்றால் கே.பி.முனுசாமிக்கு அட்ரஸே இல்லாமல் போய் இருப்பார்.

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தியவர் கே.பி.முனுசாமி

தீபா கட்சிக்கு வந்தபோது, ஏற்கனவே ஒரு பாப்பாத்தி கட்சியை கெடுத்து போய்ட்டாங்க. இப்போ, இன்னொரு பாப்பாத்தி வந்து இருக்காங்க என ஜெயலலிதாவை குறித்து என்னிடம் கொச்சையாக பேசியவர் கே.பி.முனுசாமி. கட்சியின் நலனுக்காக உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசாமல் இருந்தேன். தற்போது எடப்பாடி தரப்பினர் ஓ.பி.எஸ். குறித்து அநாகரிகமாக பேசி வருகிறார்கள். 

சசிகலாவின் கணவர் நடராஜனின் சிகிச்சைக்கு உதவியதே எடப்பாடி பழனிசாமிதான்.   இதில் இருந்து சசிகலாவுடன் அப்போதில் இருந்தே தொடர்பில் இருந்தது எடப்பாடி பழனிச்சாமி தான் என்பது தெரியும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.