இந்த மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் மழை!

இந்த மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் மழை!

மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தெலங்கானா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரோடு, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கன்னியாகுமரி மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.