ஜெயலலிதாவுக்கு என்னாச்சி.. எனக்கு ஒண்ணுமே தெரியாது - ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தமக்கு தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு என்னாச்சி.. எனக்கு ஒண்ணுமே தெரியாது -  ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் முறையாக நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

அப்போது, 2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் தமக்கு தெரியாது  எனவும், சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவு நேரத்தில் தன்னுடைய உதவியாளர் மூலம் விவரத்தை தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த நாள் பிற்பகலில் அப்பல்லோ மருத்துவமனை சென்றபோது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்ததாகவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது எனவும் ஓ. பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறினார்.

விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார் ? ஆணையம் அமைக்க முடிவு செய்தது எதற்காக என ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும்,  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் தானும் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்துள்ளார்.