சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த இணை ஆணையாளர்:

போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக வண்ணாரப்பேட்டை இணை ஆணையாளர் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த இணை ஆணையாளர்:

சென்னை திருவொற்றியூர் கே.வி. குப்பம் பகுதியில் வண்ணாரப்பேட்டை மண்டல இணை ஆணையாளர் ரம்யா பாரதி மற்றும் துணை ஆணையாளர் பவன் குமார் ரெட்டி தலைமையில் போதை விழிப்புணர்விற்க்காக மாணவர்களோடு சேர்ந்து சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காசிமேடு திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் மற்றும் போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் கே.வி.குப்பம் பகுதியில் தொடங்கி எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்று பின்னர் அப்பர் சாமி கோவில் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை எல்லையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக 5 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று போதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் கூறுகையில் போதை பொருட்களை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகர ஆணையர் அறிவிப்புகளின் பெயரில் ஆங்காங்கே போதை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இன்று வட சென்னை பகுதிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்ற அறிவுரைகளை வழங்கி மாணவர்கள் மூலமாகவே சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வட சென்னை பகுதிகளில் கள்ளச் சந்தையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் காசிமேடு கடற்கரையோர N4 பகுதி திருவொற்றியூர், உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்தால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதே போன்று வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்களை கடத்தி வருபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சென்னையில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோர்களின் மூலமாக ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று மொத்த வியாபாரிகளையும் கைது செய்யும் நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.