பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கவே உள்ளனர்.. அண்ணாமலை மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கிறேன்..!

பத்திரிக்கையாளர்களை அமைதியாக கையாள வேண்டியது தலைவர்களின் கடமை - திருமாவளவன்..!

பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கவே உள்ளனர்.. அண்ணாமலை மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கிறேன்..!

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் "பொள்ளாச்சி" அதனுடைய ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றது.

விசிக தலைவர் பங்கேற்பு: 

இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த படத்தை வாழ்த்தி இருவரும் சிறப்புரை ஆற்றினார் திருமாவளவன்.

 கேள்வி கேட்கவே உள்ளனர்:

நிகழ்ச்சி முடிந்த பிறகு வெளியே வந்த அவர், பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி கேள்விக்கு, அவர் இன்றைய சம்பவம் மிகுந்த வருத்தத்துக்குரியது என்றார். பத்திரிக்கையாளர்கள் எப்போதும் மதிக்கக் கூடியவர்கள், கேள்வி கேட்கவே அவர்கள் உள்ளனர் என்றார். 

மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கிறேன்:

சில நேரம் நமக்கு எரிச்சல் ஊட்டும் கேள்வி கூட அவர்கள் கேட்கலாம், அதனை அமைதியாக கையாள வேண்டியது அரசியல் தலைவர்களுடைய கடமை என்ற திருமாவளவன்,  பத்திரிக்கையாளர்களின் மன வருத்தத்தை அறிந்து பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கூறுவார் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.