ரவுடி பேபி சூர்யாவின் டிக் டாக் வீடியோக்களை பார்த்த பின்னர் குண்டாஸை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள்..!

ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கில் தற்போது எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்துள்ளனர்.
டிக் டாக்:
டிக்டாக் எனும் செயலியில் நிறைய இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். இதன் மூலம் நிறைய சம்பாதிக்கவும் செய்தார்கள். இதில் வந்த வருமானத்தை வைத்து பலர் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு இந்த டிக்டாக்கிலேயே மூழ்கினார்கள். பலர் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சினிமாவிலும் நுழைந்தனர்.
ஆபாச பதிவுகள்:
பலர் டிக்டாகை தங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்தி வந்த நிலையில், அதன் மூலம் தங்களது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொண்டவர்களும் உண்டு. அந்த வகையில் டிக்டாக்கில் பிரபலமடைந்தவர்கள் நிறைய பேர் இருந்தாலும் ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, இலக்கியா, திவ்யா கள்ளச்சி உள்ளிட்டோர்தான் அதிகமாக ஆபாச பதிவுகளுக்கு பெயர் பெற்றனர்.
குழந்தைகள் பாதிப்பு:
கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் செல்போனில் ஆன்லைனில் பாடம் படித்த போது இவர்களது ஆபாச வீடியோக்கள் அதிகம் வருவதாக புகார்களும் எழுந்தது. இது தொடர்பாக யாராவது ரவுடி பேபி சூர்யாவுக்கோ இல்லாவிட்டால் அவரது சிநேகிதர் சிக்காவுக்கோ போன் செய்தால் போதும் அவ்வளவுதான் அடுத்த வீடியோ ஆபாச அர்ச்சனை ரெடியாக இருக்கும்.
டிஜிபியிடம் புகார்:
இப்படி ஒருவர் போன் செய்த போது அவருடைய எண்ணை விபச்சாரம் செய்பவர் எண் என சிக்காவும் ரவுடி பேபி சூர்யாவும் கொடுத்துவிட்டதாகவும் அதன் பேரில் நிறைய பேர் அந்த பெண்ணிற்கு போன் செய்து ஆபாசமாக பேசியதால் மனஉளைச்சல் அடைந்ததாகவும் டிஜிபி வரை புகார் சென்றுள்ளது.
புகார்:
இப்படியாக வரிசையாக பத்திரிகையாளர்களை மிரட்டுவது, காவல்துறையினரை ஒரு பொருட்டாக மதிக்காமல் வீடியோக்களில் கெத்து காட்டி பேசுவதுமாக இருந்த ரவுடி பேபி சூர்யாவும் சிக்கந்தரும், கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ஆபாசமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
கோவை சிறையில்:
இந்த புகாரின் அடிப்படையில், சூர்யாவும், சிக்கந்தரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி என் பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காரமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கு ஒத்திவைப்பு:
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், இந்த வழக்கை சீராய்ந்து பார்க்கும்போது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியுள்ளதாகவும், அவர் பேசிய வீடியோக்களை நீதிபதிகள் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். லேப்டாப் மூலம் நீதிபதிகளிடம் டிக் டாக் காட்சிகள் காண்பிக்கப்பட்டபோது, ஒரு சில காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் ,வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து வழக்கை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்