வரி ஏய்ப்பு செய்த தயாரிப்பு நிறுவனங்கள்...அதிரடி சோதனையில் இறங்கிய வருமான வரித்துறையினர்..!

வரி ஏய்ப்பு செய்த தயாரிப்பு நிறுவனங்கள்...அதிரடி சோதனையில் இறங்கிய வருமான வரித்துறையினர்..!

பிரபல தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 60 இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிற்கு ஆயிரம் கோடி வருமானம்:

பிரபல தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனமான கே.எச் குழுமம், காலணிகள், தோல் பைகள், கையுறைகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த நிறுவனம் ஆண்டிற்கு சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளது.

வரியேய்ப்பு புகார்: 

இந்நிலையில், இந்த நிறுவனம் வருமானத்தை மறைத்து சொத்துக்கள் சேர்த்ததாகவும், பல தனியார் நிறுவனங்களை தன்னுடன் இணைத்து தோல் பொருட்கள் தயாரித்து வந்ததாகவும் வருமான வரித்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க: https://malaimurasu. com/posts/cover-story/Jailer-first-look-to-splash-anger-in-OLD-Ketapa-Is-it-the-same-role-anymore

அதிரடி சோதனை:

வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, இன்று காலை முதல் கே.எச். குழுமம் மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனமான ஃபரிதா தோல் தயாரிப்பு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் சோதனை:

சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, பாண்டிச்சேரி என தமிழகம் முழுவதும் உள்ள 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் நுங்கம்பாக்கம், ராமாபுரம், மண்ணடி ஆகிய பகுதிகளில் உள்ள அலுவலகம் மற்றும் நிறுவனங்களிலும், காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த சோதனை 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என தகவல் வெளியாகி உள்ளது.