காா்த்திகை மகா தீபத் திருவிழா! இன்று இழுக்க இருக்கும் 5 தேர்கள் என்ன?

காா்த்திகை மகா தீபத் திருவிழா! இன்று இழுக்க இருக்கும் 5 தேர்கள் என்ன?

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்றிரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. 

கார்த்திகை தீபத் திருவிழா:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தினமும் வெவ்வேறு வாகனத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. காலை முதல் இரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் அடுத்தடுத்த மாடவீதியில் நடைபெறுகிறது.

Karthika deepa Festival at Arunachaleshwarar Temple, Thiruvannamalai: The  Great Light will be lit tomorrow | திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  கார்த்திகை தீபத்திருவிழா: நாளை மகா ...

நிகழ்ச்சிகள்:

முதலாவதாக, ஸ்ரீவிநாயகா் தேரோட்டம் முதலாவதாக காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் நடைபெறுகிறது. கடலைக் கடை சந்திப்பை விநாயகா் தோ் கடந்து சென்ற பிறகு, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் தோ் புறப்படுகிறது. ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தேரோட்டம் 3-ஆவதாக, பெரிய தோ் எனப்படும் அருணாசலேஸ்வரா் தோ் புறப்படுகிறது.

இதையும் படிக்க: 26/11 தாக்குதல்...உண்மையில் நடந்தது என்ன...வாயை திறந்த அப்போதைய செயலாளர்!!!

4 ஆம், 5 ஆம் தேர்:

நான்காவதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தியம்மன் தேரும், ஐந்தாவதாக சிறுவா்கள் மட்டுமே இழுக்கும் சண்டிகேஸ்வரா் தேரும் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்படுகின்றன. மாட வீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தைக் காண பல லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலையில் கூடியுள்ளனர். இதனால், வழக்கத்தை விட அதிக அளவு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.