கரூர் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்...!

கரூரில், மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, காவேரி வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்...!

வெள்ளம் பாதித்த பகுதி : 

கரூர் மாவட்டம் தவிட்டுபாளையைம் நஞ்சை புகலூர் பகுதியில்  காவிரி ஆற்று பகுதியில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்து,  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 120 குடும்பங்கள், அதாவது, 323 நபர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

செய்தியாளர் சந்திப்பு : 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அவர், இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான காவேரி வெள்ளநீர் ஊருக்குள் புகாத வகையில் புகளுர் காவிரி ஆற்றில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று மூன்று மாத காலத்திற்குள் ரூ. 20 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது என கூறினார். மேலும், அதற்கான நிதிகள் ஒதுக்கீடு, திட்ட மதிப்பீடு ஆகியவை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது எனவும், நிதி ஆதாரங்கள் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் 188  மின் மாற்றிகள் பாதிக்கப்பட்டிருந்தது. இது சீரமைக்கப்பட்டு நேற்று மாலைக்குள் மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டது. மழை அதிக அளவு பெய்யும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் உயர் அதிகாரிகள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின்சாரம்  வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.