கொடநாடு வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு தொடர்பு இல்லையென்றால் அவர்கள் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்? திருமா கேள்வி?

கொடநாடு வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எந்தவித தொடர்பும் இல்லையென்றால் அவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

கொடநாடு வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு தொடர்பு இல்லையென்றால் அவர்கள் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்?  திருமா கேள்வி?

தமிழ்நாடு மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளி என்கிற விருதும், பாராட்டு விழாவும் திருச்சியில் இன்று மாலை நடைபெறுகிறது.

முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ஓட்டலில்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விரைவில் இந்தியா பொதுத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. யார் அடுத்த பிரதமர் வேட்பாளர்? என்பது முதன்மையான பிரச்னை அல்ல. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தான் தற்போது அவசியம். அதன் பிறகு பிரதமர் யார்? என்பதற்கான விடை கிடைத்து விடும் என்றார்.

மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது உட்பட சமூக நீதிக்காக திமுக மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் விசிக துணை நிற்கும் என்ற அவர், அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் திட்டம், அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.