தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்ற கும்பாபிஷேக விழா...பக்தர்கள் மீது தெளிக்கப்பட்ட புனித நீர்!

தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்ற கும்பாபிஷேக விழா...பக்தர்கள் மீது தெளிக்கப்பட்ட புனித நீர்!

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் மாகாளிக்குடியில்  உள்ள  அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. யாக சாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் ஓத, மங்கல இசையுடன், கோயில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

இதேபோன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள்  பழமையான  விநாயகர் கோயில்,  முத்தாலம்மன் கோயில், 
பாலகிருஷ்ணன் கோயில், காளியம்மன் கோயில் என நான்கு கோயில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதலில் விநாயகர் கோயிலிலும், தொடர்ந்து அடுத்தடுத்த கோயில்களிலும் குடகுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 

இதையும் படிக்க : சட்டுன்னு சரிந்த அதானி குழுமத்தின் பங்கு... பதறிப்போன நிறுவனம்...காரணம் இவர்கள் தானா?

திருவண்ணாமலை நகரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சையம்மன் மன்னார்சாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், கடந்த 4 நாட்களாக புனித நீருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலி மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை சுமந்து கோயிலை வலம் வந்து, கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சுப்ரமணியசுவாமிக்கு  சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.