இராணுவத்தில் சேர தயாராக உள்ளேன் - நாட்டுக்காக உயிரைவிட்ட லட்சுமணனின் சகோதரர்!

இராணுவத்தில் சேர தயாராக உள்ளேன் - நாட்டுக்காக உயிரைவிட்ட லட்சுமணனின் சகோதரர்!

தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் வீரமரணமடைந்த செய்தி அறிந்து, அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

தீவிரவாதிகள் தாக்குதல்:

ஜம்மு காஷ்மீரில், ராஜோரி மாவட்டம் பர்கலில் உள்ள இந்திய இராணுவ முகாமை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அவர்களில், மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ரைபிள்மேன் லட்சுமணனும் ஒருவராவார்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்:

தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகவீரர் குறித்து செய்தியறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அவரது குடும்பம் மட்டுமின்றி, அவரது சொந்த ஊரான புதுப்பட்டியில் உள்ள உறவினர்களும், கிராம மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நாட்டுக்காக உயிரைவிட்ட லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உறவினர்களும், கிராம மக்களும் குவிந்து வருகின்றனர். அத்துடன், நாட்டுக்காக தனது மகன் உயிரைக் கொடுத்தது பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ள லட்சுமணனின் தாயார் ஆண்டாள், மற்றொரு மகனுக்கும் ராணுவப் பணி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராணுவத்தில் சேர தயார்:

தாக்குதலில் உயிரைவிட்ட இராணுவ வீரர் லட்சுமணனின் சகோதரர் இது குறித்து கூறும் போது, லட்சுமணன் வீரமரணம் அடைந்தது வருத்தம் அளித்தாலும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தது சந்தோஷம் அளிப்பதாகக் கூறியுள்ள அவரது சகோதரர் ராமன், தானும் ராணுவத்தில் சேர தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.