தேனியில் ரூ.100 கடந்த டீசல் விலை: கேக் வெட்டி வேதனையை வெளிப்படுத்திய வாகன ஓட்டிகள்

தேனியில் டீசல் விலை 100 ரூபாயை கடந்து உள்ளதை அடுத்து மன வேதனையை வெளிப்படுத்தும் வகையில் வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் கேக் வெட்டி நூதன முறையில் கொண்டாடிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது. ஆனால் அதே நேரத்தில் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பே பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே நூறு ரூபாயைக் கடந்து விட்டது.

இந்த நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக மன வேதனை அடைந்த பெரியகுளம் பகுதி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கேக் வெட்டி நூதனமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.