ஓபிஎஸ்-யை பிரசாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் - தமிழ் மகன் உசேன்

ஓபிஎஸ்-யை பிரசாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் - தமிழ் மகன் உசேன்

ஈரோடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய ஓபிஎஸ்-யை அழைப்பது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும் என அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தொிவித்துள்ளாா். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஏ மற்றும் பி படிவங்கள் அடங்கிய ஆவணத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி சென்றிருந்தாா். அதைச் சமர்ப்பித்துவிட்டு நேற்று இரவு அவர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிவாகை சூடும் என நம்பிக்கை தொிவித்தார். மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ்-இன் ஆலோசனைப்படி, அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக தென்னரசு முறையாக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். 

இதைத் தொடா்ந்து தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அது குறித்து தலைமை கழகம் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.