நீட் தேர்விற்கு எதிரான சட்டமன்ற தீர்மானத்தால் எந்த பலனும் இருக்காது- எச்.ராஜா

நீட் தேர்விற்கு எதிரான சட்டமன்ற தீர்மானத்தால் எந்த பலனும் இருக்காது என பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விற்கு எதிரான சட்டமன்ற தீர்மானத்தால் எந்த பலனும் இருக்காது- எச்.ராஜா

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீட் தேர்விற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தால் எந்த பலனும் இருக்காது என தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் தென் மாவட்டங்களில் கூலிப்படை கொலைகள் அதிகரிக்கிறது என கூறினார்.

நீட் தேர்வு குறித்து ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் நீட் தேர்வை ஏற்றுகொண்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவரும் எல்லா திட்டங்களுக்கும் எதிராக இங்கே தீர்மானம் நிறைவேற்றுவார்கள்.

அந்த தீர்மானங்களால் எந்த பலனும் இருக்காது.  ஏற்கனவே நீட் தேர்வு இல்லாமல் இருந்தபோது மொத்தம் 19 பேர் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்கள் ஆனால் தற்சமயம் அரசு பள்ளியில் பயின்ற ஏழை, எளிய மாணவர்கள் 400 க்கும் மேற்பட்டோர் மருத்துவம் படிக்க சேர்ந்துள்ளனர் என தெரிவித்தார்.

நீட் தேர்வு எதிர்ப்புக்கு காரணம் தனியார் மருத்துவ கல்லூரி நடத்துபவர்களே என்றும் அதிலும் குறிப்பாக தி.மு.க, முன்னாள் அதிமுக அமைச்சர்களே காரணம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்த கேள்விக்கு  பழிவாங்கும் நடவடிக்கை என்பது இருமுனை கத்தி நான்கரை வருடங்கள் கழித்து திமுக அமைச்சர்களுக்கும் இதேபோல் நடக்கும் என பேட்டியளித்தார். இதில் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.