இனி கல்வி தொலைக்காட்சியில் ஆங்கில மொழியிலும் பாடங்கள் ஒளிபரப்பப்படும்...

தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்று முதல் ஆங்கில மொழியிலும் பாடங்கள் ஒளிபரப்பாகின்றன. 

இனி கல்வி தொலைக்காட்சியில் ஆங்கில மொழியிலும் பாடங்கள் ஒளிபரப்பப்படும்...

தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்று முதல் ஆங்கில மொழியிலும் பாடங்கள் ஒளிபரப்பாகின்றன. 

தமிழக அரசு சார்பில் இயங்கும் கல்வித் தொலைக்காட்சியில் இதுவரை தமிழ் மொழியில் மட்டுமே பாடங்கள் ஒளிபரப்பப்பட்டன. இந்த நிலையில், ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களின் வசதிக்காக இன்று முதல் ஆங்கில மொழியிலும் பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. மேலும், மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், பாடங்கள் குறித்த கேள்வி - பதில் முறையும் கொண்டுவரப்படுகிறது. அதன்மூலம் சரியான பதிலை சொல்லும் மாணவர்களின் பெயர்கள் அடுத்த நாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.

இதனால் மாணவர்கள் உடனான தொடர்பும், பாடம் கற்பதில் மாணவர்களுக்கான ஆர்வமும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. மேலும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் குழந்தைகளுக்கான திரைப்படங்களும் ஒளிபரப்பப்பட உள்ளன. 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் ஒளிபரப்பப்படுவதோடு, பாடம் சார்ந்த வீடியோக்களுடன், திறன் மேம்பாடு சார்ந்த வீடியோக்களும் ஒளிபரப்பாகின்றன.