சின்னசுருளி அருவியில் குவியும் மதுப்பிரியர்கள்.. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக புகார்!!

தேனி மாவட்டம் சின்னசுருளி அருவியில் மதுப்பிரியர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

சின்னசுருளி அருவியில் குவியும்  மதுப்பிரியர்கள்.. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக புகார்!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் பகுதியில் உள்ள இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்போது மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக சின்னசுருளி அருவியில் தண்ணீர் ஆர்பரித்து விழுகிறது. அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2 இடங்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் அதற்கு தகுந்தாற் போல அருவி பகுதியில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதியும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கு  வரும் மதுப்பிரியர்கள் அருவி வளாகத்தை மதுகுடிக்கும் பார் ஆக  பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. குடிகாரர்களின் கூடாமரமாக மாறியுள்ள சின்னசுருளி அருவியில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் விடுமுறை நாட்களில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுபாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.