”இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளால் பல கோடி ரூபாய் இழப்பு...” - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்

”இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளால் பல கோடி ரூபாய் இழப்பு...” - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்

கடந்த ஆண்டு முதல் இன்று வரை இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 350 ஆம்னி பேருந்துகளால் அரசுக்கு 21 கோடி ரூபாயும், பேருந்து உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாயும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதில்  முதலமைச்சர்  தலையிட்டு பிரச்சனை தீர்க்க வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்துவிட்டு செய்தியாளரை சந்தித்த அவர், கடந்த 2020க்கு முன்பு தமிழகத்தில் தினசரி 4000 ஆம்னி பேருந்துகள் இயங்கின. நாள்தோறும் 1,25,000 பயணிகள் சேவையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அதன்பின் கொரோனா நோய் தொற்றால் ஆம்னி பேருந்து தொழில் பாதிப்படைந்து 1600 பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கிகொண்டுள்ளது. கடந்த 26 மாதங்களாக ஆம்னி பேருந்து தொழிலில் உள்ள 570 உரிமையாளர்களில் பொருளாதார நெருக்கடியால் 15 உரிமையாளர்கள் மாரடைப்பு ஏற்பட்டும் 10 உரிமையாளர்கள் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், தொழில் சார்ந்த வாகன உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் டயர் உற்பத்தியாளர்கள், பேருந்து கட்டுமானம் செய்பவர்கள், டிராவல் ஏஜெண்டுகள், மெக்கானிக், ஏசி மெக்கானிக், எலக்ட்ரிசியன், பெய்ண்டர், டயர்மேன், சலவை தொழிலாளர்கள், வாட்டார் வாஷ் செய்பவர்கள் என 12 லட்சம் நபர்களும் மற்றும் அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியான நிலையில் தவித்து வருகின்றனர். அரசு அனுமதிக்காவிட்டால் ஆம்னி பேருந்துகளை அரசிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க : 56 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போன கோவில் சிலை...! அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு...!