எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் – சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான இளநிலை பொது மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியுள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் – சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்பு ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது. இதையடுத்து எம். பி. பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான பொது கலந்தாய்வு இணையவழியில் நடைபெற்று வருகிறது. 

அரசு கல்லூரிகளில் 3 ஆயிரத்து 995 எம். பி. பி.எஸ். இடங்கள், 157 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டான  ஆயிரத்து 390 எம். பி. பி.எஸ். இடங்களுக்கும், ஆயிரத்து 166 பி.டி.எஸ். இடங்களுக்கும் ஆன்லைனில் கலந்தாய்வு நடந்தது. இதன் மூலமாக 9 ஆயிரத்து 723 பேர் எம். பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

மாணவர்கள் ஏற்கனவே தாங்கள் தேர்வு செய்த கல்லூரிக்கு நேரில் சென்று, அசல் சான்றிதழ்களை சமர்ப் பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் 6 ஆயிரத்து 639 இடங்களுக்கு தரவரிசைப்பட்டியலில் உள்ள 6 ஆயிரத்து 82 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.