ரயில் நிலையத்தில் மாயமான ஒன்றரை வயது குழந்தை.. 30 நிமிடத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டநெரிசலில்  காணாமல் போன ஒன்றரை வயது ஆண் குழந்தையை  30 நிமிடத்தில் கண்டுபிடித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் மாயமான ஒன்றரை வயது குழந்தை.. 30 நிமிடத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் குமார். இவர் தனது மனைவி லதா மற்றும் ஒன்றரை வயது மகன் ருத்விக் ஆகியோருடன் திருப்பதி சென்றுவிட்டு, மகனுக்கு மொட்டை அடித்து கொண்டு சென்னை திரும்பினார்.

இந்தநிலையில் விசாகப்பட்டினம் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, குழந்தை ருத்விக் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், 30 நிமிடத்தில் குழந்தையை  மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து ருத்விக் மற்றும் அவரது பெற்றோர் ஜனசதாப்தி விரைவு ரயிலில் விசாகப்பட்டினம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.