மாணவர்களை நன்றாக படிக்க வைத்து விடு அவர்களை நான் வாழவைத்து விடுகிறேன் - நெகிழ்ந்த அன்பில் மகேஷ்..!

மாணவர்களை நன்றாக படிக்க வைத்து விடு அவர்களை நான் வாழவைத்து விடுகிறேன் - நெகிழ்ந்த அன்பில் மகேஷ்..!

சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் நாளுக்கான நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். 

சைகை மொழியில் தமிழ்தாய் வாழ்த்து:

காலை பள்ளி மாணவர்கள் கூடுகையின் போது சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும் நிகழ்வில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், 10 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அவரவர்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கினார்.

Image

மராத்தி திரைப்படம்:

தொடர்ந்து "ஸ்வாஷ்" என்ற மராத்தி திரைப்படம் பள்ளியில் திரையிடப்பட உள்ளது. திரைப்படம் முடிந்தபின் மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அன்பின் மகேஷ் முதலைமச்சர் கூறியதாக சில தகவலகளை நெகிச்சியோடு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 6/11 தாக்குதல்...உண்மையில் நடந்தது என்ன...வாயை திறந்த அப்போதைய செயலாளர்!!!

கலைஞரை பார்க்கிறோம்:

நிகழ்ச்சிமேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாற்றுத்திறனாளிகளின் சிரிப்பிலும், மகிழ்விலும் எங்களது தலைவர் கலைஞரை பார்க்கிறோம், சைகை மூலமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பெருமைப்பட வைத்துள்ளது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Image

ஓப்பீடு செய்து பார்க்க வேண்டாம்.:

மேலும், மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை ஏற்படுத்தி வருவதாக கூறிய அமைச்சர், தயவு செய்து நம்முடைய பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு தயவுசெய்து ஓப்பீடு செய்து பார்க்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Image

நான் வாழவைத்து விடுகிறேன் :

பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து விடு. அவர்களை நான் வாழவைத்து விடுகிறேன் என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் எனக் கூறிய அமைச்சர், உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்று மாணவர்களிடம் சைகை மூலம் செய்து காட்டினார்.