அனைத்து கல்வி நிறுவனங்களிலும் முகக்கவசம் கட்டாயம்..!

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் முகக்கவசம் கட்டாயம்..!

தமிழ்நாட்டில்  கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்ததை அடுத்து, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 223 பெருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழன்று 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா மரணம் பதிவாகியது.

இதையடுத்து சுகாதாரத்துறைப் பல இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டியதைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. இதேபோல சென்னையில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் முகக்கவசத்தை கட்டாயமாக்க சென்னை மாநகராட்சி அறிவுரை வழங்கி உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்திடவும், கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால் மாநகராட்சி சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. இத்துடன் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நோய்த்தடுப்பு வழிமுறைகளை பொதுவெளிகளில் மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.