சாதனை படைக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்... ஒரே நாளில்  11,914 பயன்பெற்ற பயனாளிகள்... 

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 3,40,999 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சாதனை படைக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்... ஒரே நாளில்  11,914 பயன்பெற்ற பயனாளிகள்... 

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டம் நீரிழிவு, சர்க்கரை நோய், புற்றுநோய், காச நோய் , சிறுநீரக சிகிச்சை முடக்கு வாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளை நாடவேண்டிய சூழல் உள்ள நிலையில், இந்நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு  அவர்களின் வீடுகளுக்கு சென்று மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன் படி மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 3,40,999 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதேப்போல், இத்திட்டம் துவங்கப்பட்டு இதுவரை நீரிழிவு நோய்க்காக 1,00,303 நபர்களும், உயர் இரத்த அழுத்த நோய்க்கு 1,51,077 நபர்களும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் 68,143  நபர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 34 சிறுநீரக நோயாளிகளுக்கு செய்துகொள்வதற்கு தேவையான வைகளும் வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 36,425  பயனாளிகளும் குறைந்த பட்சமாக மயிலாடுதுறையில் 1017 பயனாளிகளும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று குறிப்பாகச் சென்னையில் மட்டும் 11,400 பயனாளிகளும் பயன்பெற்று இருக்கிறார்கள். அதேப்போல, நேற்று ஒரே நாளில் மட்டும் 11,914 பயனாளிகள் பயன்பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.