கருமுத்து கண்ணன் காலமானார்...எம்.பி. மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி!

கருமுத்து கண்ணன் காலமானார்...எம்.பி. மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் உடலுக்கு தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 18 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராஜர் கலைக் கல்லூரி, திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் தலைவராகவும், நூற் பாலைகளில் தலைவராகவும் இருந்து வந்தார். 

இதையும் படிக்க : விடைபெற்றார் சரத்பாபு...திரண்ட பிரபலங்கள்...கிண்டி மயானத்தில் உடல் தகனம்!

இந்நிலையில் 70 வயதான இவர், உடல் நலக்குறைவால் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

கருமுத்து கண்ணனின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெரிய கருப்பன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜூ, பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, உடல் நலக்குறைவால் உயிரிழந்த கருமுத்து கண்ணனின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.