மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்...

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் இன்று தொடங்கி வைத்தார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்...

சென்ற மாதம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் தமிழகம் முழுவதும் பெருத்த வரவேற்பு பெற்ற இந்த திட்டத்தின் மூலமாக மக்கள் மிகவும் பயன் அடைந்தனர். குறிப்பாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுபவர்கள் ரத்த அழுத்தம் நீரழிவு நோய், வயதானவர்களுக்கு முழு உடல் பரிசோதனை என பல சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் என்றால் அவர்களுக்கு தேவையான ஒன்று முதல் மூன்று மாதம் வரை தேவைப்படும் மருந்துகளை வீடு தேடி சென்று கொடுக்கின்றனர். அவர்களுக்கு மருத்துவர்கள் நேரில் சென்று உடல் பரிசோதனை செய்து அங்கேயே மருந்தையும் பரிந்துரை செய்கின்றனர். உடன் மருந்தையும் அளித்து வருகின்றனர். பிசியோதெரபி தேவைப்பட்டாலும் வீட்டிலிருந்தபடியே அவருக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். இப்படி மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் மிகுந்த பயனளித்து இருக்கின்றது.

பின்னர் பேசிய அவர் மாதவரம் தொகுதி மக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இந்த திட்டத்தை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் அருகே மாதவரம் சட்டமன்ற உறுப்பினரான சுதர்சனம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக  முதலமைச்சர்  ஸ்டாலின் மற்றும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களும், மாதவரம் புழல் ஏரியின் நீர்மட்டம் மற்றும் ஆய்வு பணியை மேற்பார்வையிட்டனர். மாதவரம் சட்டமன்ற உறுப்பினராகிய நானும், அரசு அதிகாரிகளும் திட்டப்பணிகள் குறித்து விவரித்தோம். பணிகள் மற்றும் செயல் திட்டங்களை துரிதப்படுத்த ஊக்கமளித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி.

முன்னதாக  முதலமைச்சர்  ஸ்டாலின் மற்றும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களும், மாதவரம் புழல் ஏரியின் நீர்மட்டம் மற்றும் ஆய்வு பணியை மேற்பார்வையிட்டனர்.

அப்போது மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் திட்டப்பணிகள் குறித்து விவரித்தார். அதனைத் தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் சுதர்சனம்.