காலை நேரத்தில் பாதிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை..இரண்டு முறை நடந்த கோளாறு என்ன?

அலுவலக வேலைக்கு செல்வோ, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி..!

காலை நேரத்தில் பாதிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை..இரண்டு முறை நடந்த கோளாறு என்ன?

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர். சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிவேக பயணத்திற்காக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 

காலை வேலையில் சிக்னல் கோளாறு: வேலை நேரங்களில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயில், மற்ற நேரங்களில் பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் என மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விம்கோ நகரிலிருந்து சென்னை விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவையில், சிக்னல் கோளாறு காரணமாக மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. காலை 7.30 மணி முதல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் நீண்ட நேரம் ரயில் நிலையங்களில் காத்திருந்தனர். 

மீண்டும் செண்ட்ரலில் நிறுத்தப்பட்ட ரயில்: இதனையடுத்து 40 நிமிடங்கள் தாமதமாக விம்கோ நகர் ரயில் நிலையத்திற்கு வந்த மெட்ரோ ரயிலில் பயணிகள் அலைமோதி எறினர். ஆனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் சிக்னல் கோளாறு காரணமாக, ரயில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் ஒருவழியாக 20 நிமிடங்களுக்கு பிறகு ரயில் சேவை இயக்கப்பட்டது. காலை நேரத்தில் ஏற்பட்ட சிக்னல்  கோளாரால் பணிக்கு செல்வோர் மற்றும் மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகினர்.