ஆவின் பால் பண்ணையில் பால் தட்டுப்பாடு...!!!

ஆவின் பால் பண்ணையில் பால் தட்டுப்பாடு...!!!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் பால் வரத்து குறைந்ததால் தொடர்ந்து பால் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பழைய மாமல்லபுரம் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து அதிகாலை 3:30 மணிக்கு அனைத்து வாகனங்களும் புறப்பட வேண்டிய பால் வினியோக வாகனங்கள் தற்போது வரை புறப்படாததால் ஆவின் அட்டைதாரர்களுக்கு பால் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணைகளிலிருந்து இருந்து நாள் ஒன்றுக்கு 14.5 லட்சம் லிட்டர் பால்  விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் பால் உற்பத்தியாளர்கள் கடந்த 18 நாட்களாக போராட்டம் நடத்தி வருவதால் போதுமான பால் ஆவின் பால் பண்ணைகளுக்கு வராத காரணத்தாலும் பொதுமக்களுக்கு பால் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

நாள் ஒன்றுக்கு சுமார் 14.5லட்சம்  லிட்டர் பால் சென்னை முழுக்க விநியோகம் செய்ய தேவைப்படும் நிலையில் பால் வரத்து வெறும் 10 லட்சம் லிட்டருக்கும் குறைவாகத்தான் ஆவின் பால் பண்ணைகளுக்கு வருவதாக தெரியவந்துள்ளது.  பால் வரத்து குறைந்ததால் அதை ஈடுகட்ட பால் பவுடர்கள் தான் அதிக அளவில் பாலாக்கி பாக்கெட்டில் அடைப்பதாகவும் கூறப்படுகிறது.  

மேலும் சோழிங்கநல்லூர் ஆவின் பால்  பண்ணையில் பால் கொள்முதல் குறைந்ததால் இதன் காரணமாக அதிகாலை பால் பாக்கெட்டுடன் வெளியே செல்லவேண்டிய வாகனங்களில் தற்போது வரை ஒரு  சில வாகனங்கள் இன்னும் பால் பண்ணையில் உள்ளதால் பொதுமக்களுக்கு பால் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு கடந்த மூன்று வாரங்களாக இந்த நிலை நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிக்க:  கேரளா செல்கிறார் முதலமைச்சர்..