தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்று மத்திய அரசிடம் பேசுங்கள்: எல்.முருகனுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்  செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் இதனை தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்று மத்திய அரசிடம் பேசுங்கள்: எல்.முருகனுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களை குழப்ப வேண்டாம் என்று கூறும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்று மத்திய அரசிடம் பேசி விலக்கு பெற்று  கொடுத்தால் அதனை  வரவேற்போம் என அமைச்சர் தெரிவித்தார். 

கடந்த ஆட்சியில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடத்துக்கு செலவு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டிய மா. சுப்பிரமணியன், முறைகேட்டில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் அரசிடம் தற்போது போதிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், அமைச்சர் கூறினார்.