விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு..!

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு..!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கொசப்பாளையம் பகுதியில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ்  பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமிழ்வு குட்டை அமைக்கும் பணி, பண்ணை குட்டை அமைக்கும் பணி, தொகுப்பு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.