வனப்பகுதியில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அதிரடி...

வனப்பகுதியில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அதிரடி...

வனப்பகுதியில், உரிய அனுமதி பெறாமல் படபிடிப்பு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி 


மதுரை மாவட்டம் மேலூர் அருகே இடையப்பட்டி வனப்பகுதியில் பல்லுயிர்களை காணும் வகையில், 3 நாட்கள் நடைபெறும் பசுமை நடை பயணத்தை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், பல்வேறு இயற்கை ஆர்வலர்கள், வனத்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு, வனப்பகுதியில் பல்லுயிர்கள் மற்றும் அரியவகை மூலிகைகளை பார்வையிட்டனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்.... 

அரியவகை வன உயிர்கள் மற்றும் மூலிகைகள் உள்ள நிலையில் அதுகுறித்து பார்வையிட்டு,  பாதுகாக்கும் வகையில் இடையபட்டி பகுதியில் உள்ள கோயில்காடு வனப்பகுதியில்  தன்னார்வலர்களுடன் பசுமை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் படிக்க | யாதும் ஊரே யாவரும் கேளிர் - கதை திருட்டு ; எழுத்தாளர் குற்றச்சாட்டு!!!

மேலும், இந்த பகுதியில் முந்தைய காலத்தில் மத்திய சிறைச்சாலை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில். இப்பகுதி மக்கள் வனத்தை பாதுகாக்க வேண்டும் என சிறைச்சாலை அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால், இனிவரும் காலங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து மாற்று இடம் அமைப்பது குறித்து முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டு உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.

வனப்பகுதியில் அனுமதி பெற்று உரிய வழிகாட்டு நெறிமுறைகளின் படப்பிடிப்பு நடத்தலாம், ஆனால் விதிமுறைகள் பின் பற்றாமல் படப்பிடிப்பு   நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அப்போது தெரிவித்தார்